கொரோனா எனும் கொடுந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 2020 இல் தொடங்கியது 2022 இலும் தொடர்கிறது. இதனால் நிகழ்காலம் குலைந்து எதிர்காலம் பற்றிய பயத்தில் உலகின் பொதுப்புத்தி உறைந்திருக்கிறது. இப்பூகம்ப நாட்களிலும்பூக்கள் பூத்துக்கொண்டுதானிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய்த்
கொரோனா தாண்டவத்திக்குப் பிறகு திரைப்படங்களின் வரவு குறைந்திருந்தாலும் ஆல்பம் பாடல்கள் எனப்படும் தனிப்பாடல்கள் வெகுவாக வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வைரமுத்துவே தனிப்பாடல்கள் பக்கம் தன் பேனா முனையினை திருப்பி நாட்படுதேறலில் நனைய விட்டிருப்பது காலத்தின் கட்டாய மாற்றத்தை குறிக்கிறது. இந்த 2021 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான தனிப்பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அதில்
2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக விஜய் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக,ஒரு இலட்சம்
இயக்குநர் ஷங்கர்- ஈஸ்வரி இணையரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், தாமோதரன் – பத்மா இணையரின் மகன் ரோஹித் தாமோதரன் ஆகியோர் திருமணம் இன்று நடைபெற்றது. ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய
தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது திரைத்துறையில் திமுக வினர் தலையீடு அதிகமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு இருந்தது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் , சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஆதிக்கம் இருக்கும் என்கிற அச்சம் திரைத்துறையினர் மத்தியில் இருக்கிறது அல்லது உருவாக்கப்படுகிறது. இது தொடர்பாக திரையுலகில் பல்லாண்டு
திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின் கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட
51 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1.04 மணிக்குப் பிரிந்தது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். எஸ்பிபியின் மகன் சரணும் ட்விட்டரில் மறைவுச் செய்தியை உறுதி செய்தார். எஸ்.பி.பி. மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் படம் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு முகநூலில் அவர் இட்டிருக்கும் பதிவு… அசுரன் #Asuran – படம் மட்டுமல்ல
திமுக தலைவர் கலைஞர்கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு




















