செய்திக் குறிப்புகள்

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

இயக்குநர் ஷங்கர்- ஈஸ்வரி இணையரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், தாமோதரன் – பத்மா இணையரின் மகன் ரோஹித் தாமோதரன் ஆகியோர் திருமணம் இன்று நடைபெற்றது.

ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

கொரோனா பெருந்தொற்று படிப்படியாகக் குறைந்து அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Wedding Reception) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

Related Posts