சினிமா செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு இலண்டனிலிருந்து தனுஷ் நன்றி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் படம் பார்த்துள்ளார்.

படத்தைப் பார்த்துவிட்டு முகநூலில் அவர் இட்டிருக்கும் பதிவு…

அசுரன் #Asuran – படம் மட்டுமல்ல பாடம்!

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!

கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு இலண்டனில் இருக்கும் தனுஷ் உடனடியாக நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…

காலம் ஒதுக்கி
அசுரனைப் பார்த்ததற்கும்
பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.

Related Posts