சினிமா செய்திகள்

நரகாசூரன் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’.

இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

இன்று நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது என்று அறிவித்தனர்.

Related Posts