சினிமா செய்திகள்

தனுஷ் எச்.வினோத் இணையும் புதிய படம் – விவரங்கள்

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.இவற்றில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் படத்தை அவரே இயக்கி நடிக்கப்போவதாகத் தகவல்.

இவற்றிற்கிடையே இன்னொரு புதியபடத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அந்தப்புதிய படத்தைத் தயாரிப்பது செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் என்றும் அப்படத்தை இயக்கப்போகிறவர் துணிவு பட இயக்குநர் எச்.வினோத் என்றும் சொல்கிறார்கள்.

எச்.வினோத் இப்போது துணிவு படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். அப்பட வேலைகள் முடிவடைந்த பின்பு ராஜ்கமல் நிறுவனத்தில் ஒரு படம் இயக்கவிருக்கிறார்.

ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அவர் வரவும் கைவசம் இருக்கிற படங்களை தனுஷ் முடிக்கவும் சரியாக இருக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

இவற்றில் ஏதாவது மாற்றம் நடந்தால் தனுஷ் எச்.வினோத் படம் முன்னால் வந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தில் நடிக்க முன் தொகை வாங்கியிருக்கிறாராம் தனுஷ். ஆனால் அதுகுறித்து எந்தத் தகவலும் வெளியில் வராமல் இருக்கக் காரணம் அதற்கு முன்னால் மூன்றுபடங்கள் இருப்பதுதான் என்று சொல்கிறார்கள்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். பார்க்கலாம்.

Related Posts