September 7, 2024
சினிமா செய்திகள்

கமல் மணிரத்னம் படத்தில் இணைந்திருக்கும் இன்னொரு பிரபலம்

இயக்குநர் சுந்தர்சி நடிகை குஷ்பு தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறைக்கு வருகிறார் என்று சொல்லப்பட்டது.

உடனே அவர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வரத்தொடங்கின.அது எப்போது? என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால், அவர் தற்போது திரைத்துறைக்கு வந்துவிட்டார். அது வெளியில் யாருக்கும் தெரியவில்லை.

ஆம், அவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் இப்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை நிறைவு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்.

அதற்கிடையே கமல்ஹாசனை வைத்து அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

அந்தக்குழுவில்தான் அவந்திகா இணைந்திருக்கிறாராம்.

அவர் உதவி இயக்குநரானது மட்டுமின்றி இன்னொரு அதிசயமும் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அது என்னவென்றால்?

வழக்கமாக உதவி இயக்குநர்கள் எல்லோருமே அவரவர் வசதிக்கேற்ற வாகனங்களில் வேலைக்கு வருவார்கள். பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனங்களில் வேலைக்கு வருவார்கள்.சொந்தமாக இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாத பலர் நகரப்பேருந்துகள் மூலம் பணிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவந்திகாவுக்கோ இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திலிருந்து மகிழுந்து அனுப்பப்படுகிறதாம். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகளை அழைத்து வர மகிழுந்து அனுப்பப்படுவது போல் ஓர் உதவி இயக்குநரை மகிழுந்து அனுப்பி அழைப்பது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts