ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது.
ராயன் படத்தின் வெற்றியால் தனுஷுக்கு இரட்டிப்பு உற்சாகம். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவர் வெற்றி பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதே வேகத்தில் அவர் இயக்குநராக மட்டும் பணியாற்றியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதோடு, போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தையும் அவரே இயக்கி நாயகனாகவும்
மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த மலையாளப்படமான‘மின்னல் முரளி’ தமிழிலும் வெளியானது. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். ‘ஏஆர்எம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார். இதில் டோவினா தாமஸ், மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கிரிஷ் இசையமைத்திருந்தார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா
பொதுத்துறையில் பணியாற்றும் கதாநாயகன் விஜய்யின் சொந்த வாழ்க்கையில் மகன் காணாமல் போகிறார் மனைவி பிரிகிறார் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடை தாம் தி கோட். அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய்.அப்பா கதாநாயகன் மகன் வில்லன்.இதில் அப்பாவாக நடித்திருக்கும் விஜய் வழக்கம்போல்
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.ஏழாண்டுகளாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். எட்டாமாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் கமல்ஹாசன். அதன்பின் இவ்வாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று விஜய்
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது தமிழ்த் திரையுலகிலும் எதிரொலித்திருக்கிறது. உடனே களமிறங்கிய நடிகர் சங்கம் இன்று கூடி சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. பின்பு சென்னையில் நடந்தது. தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இந்தப் படப்பிடிப்பு
நடிகர் அர்ஜூன் கதையில், இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் இயக்கத்தில், துருவா சர்ஜா நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின்.இப்படத்தில் துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வசனங்கள் எழுதியிருப்பவர் ஏபி அர்ஜூன்,எழுத்துக் குழு:






















