சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் சினேகா – அக்டோபரில் படப்பிடிப்பு

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில் விஜய்யை வேறுபடுத்திக் காட்ட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான சோதனைகள் செய்ய விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக்குழு சென்றுள்ளது.

இப்படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றன. இந்தப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அம்மூன்று வேடங்களில் இரண்டு வேடங்களுக்கு இணையர் உண்டாம். ஒரு வேடம் தனியாகவே வருமாம்.

விஜய்க்கு இணையராக நடிக்க இருவரைத் தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ஒருவர் ஜோதிகா, இன்னொருவர் பிரியங்காமோகன்.

இவ்விருவரில் இப்போது ஜோதிகா இப்படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டாராம்.

அதனால் அவருக்குப் பதிலாக சிம்ரனை நடிக்க வைக்கும் முயற்சி நடந்ததாம். அதுவும் ஈடேறவில்லை.

இப்போது இறுதியாக நடிகை சினேகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது என்பதால் தேதி உட்பட எல்லாம் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

ஏற்கெனவே மெர்சல் படத்தில் நித்யாமேனன் நடித்திருந்த வேடத்துக்கு முதலில் ஜோதிகாவைத்தான் நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். அப்படத்திலும் கடைசி நேரத்தில் ஜோதிகா விலகிக் கொண்டார். இப்போதும் அதுபோலவே நடந்திருக்கிறது.

இம்முறை ஜோதிகாவுக்குப் பதிலாக சினேகா நடிக்கிறார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான வசீகரா படத்தில் விஜய்க்கு இணையராக நடித்திருந்தார். இருபதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள்.

Related Posts