சசிகுமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், 1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன.
முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது.
பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சசிகுமார். அவருக்கேற்பவும் தற்காலத்துக்கேற்பவும் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம் பாக்யராஜ்.
இப்படத்தை அசுரகுரு படத்தைத் தயாரித்த ஜே எஸ் பி. சதீஷ் தயாரிக்கவிருக்கிறார்.
முந்தானை முடிச்சு படத்தில் கதாநாயகியாக ஊர்வசி நடித்திருந்தார். இப்போது உருவாகவிருக்கும் படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறார்.
இதைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.











