சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் மிஷ்கின் ஐம்பதாவது பிறந்தநாள் இன்று. இந்நாளில் அவர் இயக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.அவர் இயக்கத்தில் உருவாகும் பத்தாவது படம் இது.

அதன் விவரம்…

மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ‘பிசாசு.’ அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம், ‘பிசாசு-2’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.

கதை நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். ‘சைக்கோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி மிஷ்கின் கூறியதாவது….

பிசாசு-2, முழுக்க முழுக்க பேய்க் கதையாகத் தயாராகிறது. இது, சிரிப்புப் பேய் அல்ல. ஆக்ரோசமான பேய். முதல் பாகம் தொடர்பான சில காட்சிகள் அமைந்திருக்கும். முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிகமாக திகில் காட்சிகள் இடம்பெறும். படத்தில், மிக பயங்கரமான பயமுறுத்தல்களும், மிரட்டல்களும் இருக்கும்.

ஒரு மலை கிராமத்தில் கதை சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Related Posts