கமல் 60 விழா – விஜய் அஜீத் கலந்துகொள்ளாதது ஏன்?
நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவருடைய கலைப்பயணத்தின் 60 ஆம் ஆண்டு ஆகியனவற்றைக் கொண்டாடும் விதமாக, கலைநிகழ்ச்சியொன்றை நடத்தியது ராஜ்கமல் நிறுவனம்.
நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.,
இவ்விழாவில் கல்ந்து கொள்ள விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இருவருமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
லோகேஷ்கனகராஜ் இயக்கும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் இவ்விழாவில் விஜய் கலந்துகொள்ளவில்லை என்று அப்படத்தைத் தயாரித்திருக்கும் நிறுவனம் சொல்லியிருக்கிறது.
அஜீத் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் வரவில்லை. அஜீத்தின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.










