சினிமா செய்திகள்

செப்டெம்பர் 24 இல் படப்பிடிப்பு – தனிவிமானத்தில் செல்லும் அஜீத்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசு 75 பேருடன் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில படங்கள் மட்டுமே படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.

செப்டெம்பர் 24 முதல் படப்பிடிப்பைத் தொடங்க ‘வலிமை’ படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இது தொடர்பாக அனைத்து நடிகர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டில் எடுக்கத் திட்டமிட்டு இருந்த காட்சிகள் அனைத்தையும் இந்தியாவிலேயே படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காகப் புதுதில்லியில் இதுவரை எந்தப் படப்பிடிப்புமே நடக்காத ஓரிடத்தில் வலிமை படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறாராம் போனிகபூர்.

செப்டெம்பர் 24 முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ள அஜீத்தை தனிவிமானம் மூலம் தில்லிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளாராம் போனிகபூர்.

படப்பிடிப்பில் கலந்துகொள்வோரைத் தேர்வு செய்து அவர்களுக்கு எல்லாவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கியிருப்பதோடு படப்பிடிப்புத் தளத்திலேயே ஒரு மருத்துவக்குழுவையும் அமர்த்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Related Posts