அன்று சிம்பு இன்று விஜய்சேதுபதி – த்ரிஷா இப்படிச் செய்யலாமா?
விஜயசேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் நடித்தமைக்காக விஜய்சேதுபதி த்ரிஷா மட்டுமின்றி அப்படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது வெளியாகும் படங்களைக் கேலி செய்யும் வகையில் மீம்ஸ்கள் வெளியாகின்றன.
இந்தப்படமும் அதற்கு தப்பவில்லை. அதிலும் குறிப்பாக த்ரிஷா பற்றி உலவும் ஒரு மீம்ஸ் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது .
அதில், விண்ணைத்தாண்டிவருவாயா சிம்பு, 96 பட விஜயசேதுபதி ஆகியோரின் படங்களோடு இரண்டு படங்களில் நடித்த த்ரிஷாவின் படத்தையும் போட்டு, எவ்வளவு உருகி உருகி காதலித்தாலும் கடைசில ஃபாரின் மாப்பிள்ளையை உஷார் பண்ணிட்டு போயிடுறியேம்மா
இவ்வாறு அதில் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நிறைய வரவேற்பு.
அந்தப்படத்தைப் போட்டு இதைப் பார்த்தீர்களா? என்று த்ரிஷாவிடம் சின்மயி கேட்கிறார்.
அதைப் பார்த்த த்ரிஷா, ஹா ஹா ஹா ஆமாம் நான் அப்படித்தான் செய்தேன் என்று ட்வீட் செய்ய, நம்ம பசங்கபாவம் என்று பலரும் கருத்து தெரிவிக்க, எல்லோரும் மகிழ்ச்சியாக அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.











