சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆர்.கண்ணன் இயக்கும் அந்தப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். ‘தில்லுக்கு துட்டு 2’ வெற்றிக்குப் பின் சந்தானம் நடிக்கும் படம் என்பதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு.

இயக்குநர் ஆர்.கண்ணனின் முதல் படமான ‘ஜெயம் கொண்டான் படத்திலிருந்து அவருடன் பயணித்து வருகிறார் சந்தானம். இப்போது சந்தானத்தை நாயகனாக வைத்து இயக்குகிறார்.

இந்தப்படத்தை ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது எம்.கே.ராம்பிரசாத்தின் எம்கேஆர்பி புரடக்‌ஷன்ஸ்.

இப்படத்தில் நாயகியாக முன்னணி நடிகை மற்றும் முன்னணிக் கலைஞர்கள் பங்குபெறும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவிருக்கிறது.

Related Posts