கொலைகாரன் பட ரிலீஸ் தேதி அறிவிக்காதது ஏன்?
விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள படம் கொலைகாரன். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார்.
த்ரில், சஸ்பென்ஸ் வகைப் படமான ‘கொலைகாரன்’ வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 29 அன்று அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.ஆனால் சொன்னபடி அறிவிக்கவில்லை.
அதற்குக் காரணம் என்ன என்பதை அப்படத்தை வெளியிடும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், படவெளியீடுகளில் இந்த மாதம் கடும்போட்டி இருக்கிறது.
மே 1 ஆம் தேதி தேவராட்டம், மே 3 ஆம் தேதி கே 13, ஒன்பது பத்து தேதிகளில் நீயா 2, கீ, 100 மற்றும் அயோக்யா, மே 17 ஆம் தேதி மிஸ்டர் லோக்கல், மே 24 லிசா மற்றும் இரண்டு படங்கள், மே 31 ஆம் தேதி என் ஜி கே ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.
கொலைகாரன் படம் எப்போது வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்கிறோம் என்று தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.










