சினிமா செய்திகள்

அவமதித்த மணிரத்னம் ஆவேசமடைந்த கே.வி.ஆனந்த் – நவரசா பரபரப்பு

இயக்குநர்கள் மணிரத்னம் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகிறது.

தொடக்கத்தில், கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இவற்றை இயக்குவார்கள் என்று சொல்லப்பட்டது.

அதேபோல, சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதன் ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

இப்போது இவற்றில் நிறைய மாற்றங்கள். பொன்ராம் படம் எடுத்த பின் நிராகரிக்கப்பட்டது. ஹலிதா சமீம் எடுக்குமுன்பே விலகிக் கொண்டார் என்ப்து உட்பட பல மாற்றங்கள்.

இப்போது இன்னொரு அதிர்ச்சிகர நிகழ்ச்சி நடந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒன்பது பேரில் இயக்குநர் கே.வி.ஆனந்த்தும் ஒருவர்.அவர் இயக்கிய படத்தில் நாயகனாக விக்ராந்தும் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், இப்படம் பற்றி மோசமான கருத்தொன்றை மணிரத்னம் சொல்லிவிட்டாராம். அது கே.வி.ஆனந்த் வரை வந்து சேர்ந்ததும் மிகவும் கோபமாகிவிட்டாராம் கே.வி.ஆனந்த்.

அதனால், படத்தொகுப்புப் பணிகளைப் பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டாராம் கே.வி.ஆனந்த்.

அதன்பின் பலமுறை வேலைகளை முடித்துக் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டும் சாதகமான பதில் இல்லை என்கிறார்கள்.

எனவே, அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts