மீண்டும் களமிறங்கிய கலைஞர் டிவி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி
தொலைக்காட்சிகள் அதிகரித்த பிறகு திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர் என்கிற விமர்சனம் உண்டு.
ஆனால் திரைப்பட வியாபாரத்தின் மேலும் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வந்த பிறகு திரைப்படத்துறைக்கு ஒரு மறுமல்ர்ச்சி ஏற்பட்டது.
2007 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய போது திரைப்படத்துறைக்குப் பொற்காலம் எனலாம்.
போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை அதிக விலைக்கு வாங்கினார்கள்.
நடுவில் புதிய படங்களை வாங்குவதில்லை என்று கலைஞர் தொலைக்காட்சி முடிவெடுத்ததும் திரைத்துறை சோர்ந்து போனது. படங்களின் ஒளிபரப்பு உரிமை விற்பதே இல்லை. அல்லது மிகக்குறைந்த விலைக்குக் கேட்கப்பட்டது.
படங்கள் வாங்குவது கட்டாயம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியபோதும் ஒன்றும் முன்னேற்றம் இல்லை.
இப்போது மீண்டும் கலைஞர் தொலைக்காட்சி புதிய படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்கத் தொடங்கியிருக்கிறது.
அண்மையில் செய் ,செம ஆகிய சிறு படங்களை நல்ல விலை கொடுத்து அந்நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இதனால் திரைத்துறையினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.











