சினிமா செய்திகள்

அக்டோபரில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு – சிவகார்த்திகேயன் முடிவு

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் தயாராகியுள்ளது.இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

24 ஏஎம் ஸ்டியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருக்கிறது. அப்படத்தில் நிறைய கணினி வரைகலைக் காட்சிகள் இருப்பதால் அதன் வேலைகள் முடிவடையப் பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

இவற்றிற்கடுத்து சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கின்றனவாம்.

இப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன நடிக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை.அதேசமயம், அவருடைய அடுத்த படத்தையும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்றும் அந்தப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் என்பவர் இயக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்போது அடுத்து அந்தப்படம்தான் என்றும் அதன் திரைக்கதையை முழுமையாக இயக்குநர் அசோக் முடித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

திரைக்கதைப் பணிகள் முழுமையடைந்தன என்று தெரிந்தவுடன் படப்பிடிப்புகான தேதிகள் ஒதுக்க்விட்டாராம் சிவகார்த்திகேயன். அக்டோபர் மாதத்தில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts