சினிமா செய்திகள்

தமிழ்க்கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வாடிவாசல் வடிவமைப்பு – இரசிகர்கள் கொண்டாட்டம்

சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.

அதன்பின், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 16) ‘வாடிவாசல்’ படத்தின் தலைப்பு வடிவமைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஏறுதழுவலின் போது திமிறி வரும் காளையுடன் அவற்றின் கொம்புகளை எழுத்துகளின் மேல் வைத்து தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

சூர்யா இரசிகர்கள் இதனை சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதைப் படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இந்தப் படத்தை உருவாக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts