சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது காவல் ஆணையரிடம் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார்.

ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.

இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளீயிட்டுள்ள அறிக்கையில்….

ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரைப்படமான லிஃப்ட் இன் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் 2021 இல் ஒப்பந்தம் போடப்பட்டது.

இதையடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ரவீந்தர் சந்திரசேகரன் நடந்து கொள்ளாததால் எங்கள் ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்துக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஏகா எண்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நபரான திரு.திலீப்குமார் சென்னை காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் லிஃப்ட் தமிழ்த்திரைப்படம் சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமமும் இல்லை. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் லிஃப்ட் தமிழ்த் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு வியாபாரத்திற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்புகொள்ள வேண்டாம் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

லிஃப்ட் தமிழ்த்திரைப்படத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ செய்திகளும் ஏகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினால் மட்டுமே தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts