அடுத்தடுத்து சிக்கல்கள் – பொன்னியின் செல்வன் குழு தடுமாற்றம்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.
அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இம்மாதம் (மார்ச்) 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக துணைநடிகர்கள்,நடனக் கலைஞர்கள் உட்பட சுமார் முன்னூறு பேருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாம். ஆனால் அவை அனைத்தும் தற்போது இரத்து செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
அதற்குக் காரணம், கொரோனோ வைரஸ் பீதி காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்களாம்.
அதோடு இயக்குநர் மணிரத்னம், சிறுநீர்த்தொற்று நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறாராம்.
இக்காரணங்களால் படப்பிடிப்பு நடத்த போட்ட திட்டம் மொத்தமாகக் குழம்பிவிட்டதாம்.
இதனால் நிர்வாகிகள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்களாம்.
மணிரத்னத்துக்கு உடல்நலம் சீரானதும் படப்பிடிப்பைத் திட்டமிடலாம் என்றால் நடிகர்களின் தேதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறதாம்.
இப்படிப் பல சிக்கல்கள் காரணமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமாகிறது என்கிறார்கள்.











