சமந்தாவால் அவமானம் – தெறிக்கும் டிவிட்டர்
அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று வெளியிட்டது.
அதில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ,நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி நாளை அத்தொடர் வெளியாகவுள்ளது.
இதனால் தமிழ் உணர்வாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
எங்கள் உணர்ச்சிகளை அவமதித்தவர்கள் எல்லோரும் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள்.இப்படத்தின் இயக்குநர்கள் தொடரில் அப்படி எதுவும் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.ஆனால் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருக்கும் சமந்தா எதுவுமே பேசவில்லை.
இந்தத் தொடரை ஒளிபரப்பவே கூடாது, மீறி ஒளிபரப்பினால் படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தா உள்ளிட்ட அனைவரது அடுத்தடுத்த படங்களையும் புறக்கணிப்போம், இதை ஓர் இயக்கமாக நடத்துவோம் என்று தமிழ் உணர்வாளர்கள் கூறுகின்றனர்.
சொன்னதோடு நில்லாமல், உங்களால் அவமானப்படுகிறோம் எனும் பொருளில் Shameonyousamantha எனும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி ஏராளமானோர் ட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழ் நடிகை தமிழகத்தில் பிறந்தவர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் சமந்தா, தமிழர்களின் அடையாளத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடித்திருப்பதும், அவருடைய மேலாளராக இருக்கும் நடிகர் விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ்தான் இதற்குக் காரணம் என்பதாலும் தமிழ் உணர்வாளர்களின் கோபம் அதிகரித்திருக்கிறது.
இது எதிர்காலத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் நிகழ்வுகளில் கடுமையாக எதிரொலிக்கும் என்று சொல்கிறார்கள்.
இதற்கு இத்தொடரை ஒளிபரப்பாமல் இருப்பதே தீர்வு என்றும் சொல்கிறார்கள்.











