சினிமா செய்திகள்

விஸ்வாசம் வசூல் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’.இப்படம் 2019 தைப்பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் ரஜினி வெளியானது.

இந்தப்படத்தின் வசூல் நிலவரம் பற்றி ஏராளமான செய்திகள் வந்தன. ஆனால்,படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் எதுவுமே கூறாமல் இருந்தார்.

முதன்முறையாக ஆங்கில நாளேடொன்றுக்கை அவர் அளித்துள்ள பேட்டியில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூல் குறித்து கூறியிருக்கிறார்.

அதில்…..

இந்தப் படம் எனது வாழ்நாளிலேயே ஆகச்சிறந்தது. இத்திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி. இதற்கான பாராட்டு அஜித், இயக்குநர் சிவா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் செல்ல வேண்டும்.

இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும்.

‘விஸ்வாசம்’ படத்துக்கு முன்னதாக ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. கமர்சியல் படங்கள் எல்லாம், பெண் ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. அவர்களுக்குப் பிடித்தால் மிகப் பெரும் வசூல் செய்யும்.

இவ்வாறு சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரே இப்படிப் கூறியிருப்பதால் இதை அதிகாரப்பூர்வ கணக்காக எடுத்துக்கொள்ளலாம்.

Related Posts