ரஜினியின் அடுத்த படம் குறித்து வந்துள்ள இரண்டாவது அறிவிப்பு
பேட்ட படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தேதிகள் ஒதுக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்கான கதையை ரஜினிகாந்திடம் கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே இந்தப் படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் சனவரி 15 ஆம் தேதி படத்தின் தலைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்த ஏ.ஆர்.முருகதாஸ், ’எனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல. தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக முதலில் வெளியிடப்பட்ட செய்தி அது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,இன்று (பிப்ரவரி 11,2019) ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்
“தளபதி படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் பணிபுரிகிறேன்” என பதிவிட்டுள்ளார்.











