சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் 28 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜெயம்ரவி இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பும் முதல்பார்வையும் இன்று (பிப்ரவரி 12,2022) வெளியானது.

ஜெயம்ரவியின் 28 ஆவது படமான இதை,ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப்படத்திற்கு அகிலன் (King Of The Indian Ocean) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அகிலன் திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

ஸ்கிரீன்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டுள்ளதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின.

அவற்றில் முதல்படமாக அகிலன் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts