சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகின் தற்போதைய காதல் ஜோடி?

மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது.

இந்தப்படத்துக்கு அடுத்து ஒரு புதியப்டத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அந்தப்படத்தை பாலாஜிமோகன் இயக்கவிருக்கிறாராம்.

டாக்டர் முரளிமனோகர் தயாரிக்கும் அந்தப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் இலண்டனிலேயே நடக்கவிருக்க்கிறதாம்.

செப்டம்பர் பத்துமுதல் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

இந்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராமோடு அமலாபால் மற்றும் துஷாராவிஜயன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்களாம்.

இவர்களில் துஷாராவிஜயனை இந்தப்படத்தில் நடிக்க வைக்கும்படி பரிந்துரை செய்தது நாயகன் காளிதாஸ்ஜெயராம்தான் என்கிறார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்திருந்தார்கள். அப்போது அவர்கள் இருவருக்குமிடையில் நல்ல நட்பு உருவாகியிருக்கிறது. அதனடிப்படையிலேயே இந்தப் பரிந்துரை நடந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், அந்த நட்பு காதலாகவும் மாறியிருப்பதாக ஒரு செய்தியும் உலவுகிறது.

தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது புதிய காதல் இணைகள் உருவாவதுண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு காதல் இணையாக இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று பேச்சு இருக்கிறது.

இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தாலே இப்படி ஒரு வதந்தி கிளம்புவதுண்டு, இதுவும் அதுபோன்றதொரு வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தாம் விளக்கவேண்டும்.

Related Posts