1990 இல் கமல் செய்த செயல் – வியந்து பாராட்டும் இயக்குநர்
தமிழ்த்திரையுலகில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி கமல்ஹாசன். அவர் 1990 ஆம் ஆண்டு செய்த ஒரு செயலை வியந்து பாராட்டியிருக்கிறார் இயக்குநர் அஜயன்பாலா.
அவர் எழுதிய பதிவில்….
உண்மையில் கமல் தமிழ் சினிமாவுக்கு ஒரு இன்னோவேட்டர்தான். காலையில் மைக்கேல் மதனகாமராஜன்
( திரிபு- காமேஸ் சீக்வன்சுக்காக) பார்த்தபோது தான் கவனித்தேன். பாரின் ரிடர்ன் கமல் காரில் நாகேஷோடு பேசிக்கொண்டெ செல்லும்போது மடியில் லேப் டாப் மாதிரி ஒரு குட்டி கணிணியை வைத்து கணக்கு வழக்குகளை பார்க்கிறார்.
உடனே கூகுள் போய் பார்த்தபோது அவர் உபயோகிக்கும் அந்த குட்டி கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்டதே1989ல் தான் அடுத்த வருடமே சினிமாவில் அதை காண்பித்து விட்டார்.எனக்கு தெரிந்து இந்திய சினிமாவுக்கே முதல் முறை அப்பொதுதான் லேப் டாப் அறிமுகம் என நினைக்கிறேன். எல்லாவற்றையும் முதலில் தருவிக்கும் அவரது முனைப்பு இப்ப இந்த தலைமுறையில் யாருக்காவது இருக்கான்னு யோசிக்கிறென். கண்ணுக்கெட்டியவரை ம்ஹும் , கானல் தான்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.











