அநியாயமா கொன்னுட்டாங்க நல்லாவே இருக்கமாட்டாங்க – சேரன் சாபம்
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்த படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருந்தார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படம் சனவரி 24 அன்று வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் பெறவில்லை.
இதுதொடர்பாக நேற்று ட்விட்டரில் இந்தப்படத்தைப் பாராட்டி ஒரு பெண்மணி பதிவிட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக சேரன் வெளியிட்டுள்ள பதிவில்….
அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு…
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.
அதற்கு, உண்மைதான் சார்..நல்லபடியாக ரீச்சாகி இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்…
இன்னும் பத்து வருடங்கள் கழித்து “ராஜாவுக்கு செக்”
படம்போல வருமான்னு பேசுவாங்க…Worried face
என்று அப்பெண்மணி பதிலிட்டிருக்கிறார்.அவர் உட்பட பலர் சேரனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர்.









