சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகினார் அமிதாப்பச்சன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் தடைபட்டிருந்த படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகளில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நடிகர்கள் அனைவரும் பங்கேற்று நடித்து வருகிறார்கள்.

இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க அமிதாப்பச்சன் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் அமிதாப்பச்சன் படத்தில் நடிக்க இயலாது என்று சொல்லி விலகிவிட்டாராம்.

அதனால் அவருக்குப் பதிலாக பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

பிப்ரவரி இறுதிவரை ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts