வரலட்சுமி இடத்தைப் பிடித்தாரா ரெஜினா ?
விஷால் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இலண்டனில் நடந்து முடிந்திருக்கிறது.
அண்மையில் அங்கிருந்து படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில், புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில்,விஷாலுடன் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா, படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். மூவரும் நாயகிகளா? என்றால் இல்லையாம். மூவரில் ரெஜினா எதிர்மறை நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
மிகவும் சக்திவாய்ந்த அந்த வேடம், தொடக்கத்தில் வரலட்சுமிக்காகவே வடிவமைக்கப்பட்டதாகவும், விஷாலுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதால் அந்த வேடத்தில் ரெஜினா நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.