October 18, 2026
சினிமா செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி

சென்னையில் புற்றுநோய்க்கெதிராகப் போரிடும் தன்னார்வ அமைப்பு அழகான உலகிற்கான திடமுடிவு எனும் பொருள்படும் சங்கல்ப்.

இவ்வமைப்பு நேற்று வெளீயிட்டுள்ள அறிவிப்பு….

அன்பான கவனத்திற்கு

சென்னையில் வாழும், தாமாக மளிகைப் பொருட்கள் வாங்கச் சிரமப்படும் புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோய் வென்றவர்கள் சங்கல்பை அணுகி அடிப்படை மளிகை பொருட்களை தங்களது இல்லத்திலிருந்தே இலவசமாகப் பெற்றிடலாம். அதற்காக 7825888000 ஐ அழைக்கவும்.

இவ்வாறு அவ்வமைப்பு அறிவித்திருந்தது.

அவ்வமைப்பின் இந்த அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. இதனால் இச்செய்தி பரவலாகப் போய்ச் சேர்ந்து அவ்வமைப்பு செய்யும் உதவிகளைத் தகுதியுள்ளோர் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தாமாக முன்வந்து, இச்செய்தியின் விளம்பரத் தூதராகச் செயல்பட்டிருக்கும் விஜய்சேதுபதியைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

Related Posts