செல்வராகவன் கொடுத்த தகவல் – கூட்டத்தில் சிக்கிய சூர்யா
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது.
சூர்யா நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.
சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டார்.
இதனால் தகவல் தெரிந்துகொண்ட அங்குள்ள ரசிகர்கள் அவரைக் காண படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று சூர்யாவைக் காண படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த ரசிகர்கள் கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவைச் சூழ்ந்தனராம்.
இதுகுறித்து படப்பிடிப்புக் குழுவினர் கூறியதாவது…
சூர்யாவைச் சூழ்ந்து கொண்ட ராஜு பாய், சூர்யா என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் அவருக்கு அன்பு வரவேற்பு அளித்தனர். சூர்யாவும் அவர்களுக்குக் கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
தமிழுக்கு நிகராக தெலுங்கிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவரை நேற்று ரசிகர்கள் சூழ்ந்து கோஷங்கள் எழுப்பியது ஏதோ தமிழ் நாட்டில் நடக்கிறதா ? அல்லது ஆந்திராவில்லா ? என்று ஒரு யோசிக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சூர்யாவின் பெருமையைச் சொல்லும் வகையில் இப்படிச் சொல்கிறார்கள்.
ஆனாலும் செல்வராகவன் ட்விட்டரில் தகவல் தெரிவித்ததால் இந்தச் சிக்கல் ஏற்பட்டது என்கிறார்கள்.











