சினிமா செய்திகள்

விஜய் சுதாகொங்கரா கூட்டணி முறிந்தது ஏன்? – ஆச்சரியமூட்டும் தகவல்

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.

இந்த முடிவு ஏற்படுவதற்கு முன்பாக பல இயக்குநர்கள் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கிறார்கள்.அந்த இயக்குநர்கள் பட்டியலில் சுதா கொங்கராவும் இருந்தார். அவர் கூறியுள்ள கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறப்பட்டது.

ஆனாலும் அது நடக்காமல் போயிருக்கிறது. அதற்கு என்ன காரணம்? என்பது குறித்து திரைத்துறையில் உலவும் இரகசியத் தகவல் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கிறது.

சுதா கொங்கராவின் கதை விஜய்க்குப் பிடித்திருக்கிறது. சன் பிக்சர்ஸுக்கும் அவரை வைத்துப் படமெடுப்பதில் சம்மதம் என்றான பிறகு தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய பேச்சு வந்திருக்கிறது.

படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் வேண்டுமென்று சுதா கொங்கரா சொல்லியிருக்கிறார். அங்குதாம் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

விஜய் தரப்பிலிருந்து இயக்குநரிடம் பேசியவர், ஜி.வி.பிரகாஷ் வேண்டவே வேண்டாம் வேறு இசையமைப்பாளர் என்றால் இப்பேச்சுவார்த்தை தொடரும் என்று சொன்னாராம்.

இதனால் கோபமான இயக்குநர் சுதா கொங்கரா, என்னுடைய கதைக்கு யார் இருந்தால் சரியாக இருக்கும் என்பது எனக்குத்தான் தெரியும்.எனக்கு ஜி.வி.பிரகாஷ்தான் சரியாக இருப்பார். அவரை வேண்டாமென்று சொன்னால் இந்தப்படத்தையே நான் இயக்கவில்லை என்று ஒதுங்கிக் கொண்டாராம்.

இசையமைப்பாளருக்காக விஜய்யையே நிராகரிக்கிற அளவுக்கு அவர் போயிருக்கிறார் என்று உலவும் தகவல் முழு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று பலர் சொல்கிறார்கள்.

அதேசமயம், முன்பு ஜி.வி.பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவர் இப்போது விஜய்யிடம் உதவியாளராக இருக்கிறார் என்றும் இந்தக் குழப்பங்களுக்கு அவர்தான் காரணமென்றும் சிலர் சொல்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் இது முழு உண்மையா? இல்லையா? என்பது தெளிவாகும்.

Related Posts