விமர்சனம்

வெந்து தணிந்தது காடு – ட்ரெய்லர் விமர்சனம்

வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் கண்டேன்.

இப்போது வந்த லோகேஷ் கனகராஜ் எல்லாம் loki verse என்று ஆரம்பித்துவிட்டார். கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். டிரெய்லரை உற்று நோக்கும்போது மச்சம் என்பது அடமையடாவின் sequal போலவும் எனை நோக்கித் தோயும் பாட்டாவின் prequel போலவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா!

‘குதிரை வந்தது.. கன்னி இறங்கினாள்… ஐயோ அம்மா செத்தேன்’ என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒருவரியில் முடியும் தினத்தந்தி சிந்துபாத் கதையைப் போல கௌதம் மேனனும் தனது எல்லாப் படங்களுக்கும் ஒருவரிக் கதையை டெம்ப்ளேட்டாக வைத்திருக்கிறார்.

ஹீரோ ஹீரோயின் அறிமுகம், அவர்களுக்கு இடையே காதோல், பிறகு ட்ராஜடி, பின்பு துப்பாக்கியில் டமால் டுமீல்.

போஸ்டரில் கையில் சொரடு வைத்துக்கொண்டு வறண்ட நிலப்பரப்பில் நின்று கொண்டிருந்த சிம்பு, ட்ரெய்லரில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டு போல ரவுடிகளை டுபுக்கு டுபுக்கு என்று துப்பாக்கியில் குறிபார்த்து (டுபுக்கு டுபுக்குதான்… மாத்தி படிச்சி கிடிச்சி தொலைக்கப் போறீங்க) சுட்டு வீழ்த்தி
நீளதாடியுடன் குஷன் ஷோபாவில் அமரும்போதே புரிந்துவிடுகிறது இதுவும் வழக்கம்போல ஒரு டண்டனக்கா டான் மூவிதான் என்று.

கூடவே காட்சிகளில் இந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த ஏதோ ஒரு இந்திப்படத்தின் பாதிப்பும் தெரிகிறது.

நான் கூட ‘நமக்கு கண்டன்ட் வரத்து எங்க இந்த ஒரு படத்தோடு நின்றுவிடுமோ’ என்று கவலையுற்றேன். ஆனால் நல்லகாலம்.. இதற்கு இரண்டாவது பார்ட்டும் இருக்கிறதாம்.

வாசு இன்னும் அந்த வாய்ஸ் ஓவரை விடவில்லை. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை ஓத்தா சொல்வதை மட்டும் விட்டிருக்கிறார்

– சிவகுமார் வெங்கடாசலம்

முன்னோட்டம் பார்க்க….

Related Posts