September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 60)

விமர்சனம்

விமர்சனம்

பிரின்ஸ் – திரைப்பட விமர்சனம்

சொந்தச் சாதியைச் சேர்ந்த சொந்தத் தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் மட்டுமின்றி நாடும் கடந்து இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். 
விமர்சனம்

சர்தார் – திரைப்பட விமர்சனம்

இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார். இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும்
விமர்சனம்

காந்தாரா – திரைப்பட விமர்சனம்

மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் படம்
விமர்சனம்

ஷூ – திரைப்பட விமர்சனம்

டைம் டிராவல் வகைப் பட வரிசையில் சேரக்கூடிய படமாக வந்திருக்கிறது ஷூ. முழுமையான தலைப்பு ரிபீட் ஷூ. ஒரு கால் ஷூ வை தரையில் உதைத்தால் பத்துநிமிடம் பின்னால் போகலாம் இன்னொரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்துநாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஒரு ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். அது சந்தர்ப்ப வசத்தால் யோகிபாபுவின் கைகளுக்கு மன்னிக்கவும் கால்களுக்குக் கிடைக்கிறது. அதனால்
விமர்சனம்

ஆற்றல் – திரைப்பட விமர்சனம்

அறிவியல் தொழில்நுட்பத் துணையுடன் கொலை கொள்ளை என இஷ்டத்துக்குச் செய்து திரியும் ஒரு கூட்டத்தை சாமானிய இளைஞனொருவன் ஆற்றலுடன் எதிர்கொள்வதுதான் ஆற்றல் திரைப்படம். புதியகண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவராக இருக்கிறார் நாயகன் விதார்த். ஆள் இல்லாமல் இயங்கும் மகிழுந்தை உருவாக்குவது அவருடைய கனவு. அந்தக்கனவை நனவாக்க உறுதுணையாக இருக்கும் அப்பா திடீரென மரணமடைகிறார். அவர் எப்படி
விமர்சனம்

சஞ்ஜீவன் – திரைப்பட விமர்சனம்

ஸ்னூக்கர் என்னும் மேடைக் கோல் பந்து விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு வந்திருக்கும் முதல் திரைப்படம் சஞ்ஜீவன். புதுமுக நடிகர் வினோத் லோகிதாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டை இரசித்து விளையாடும் காட்சிகள்,காதல் காட்சிகள், நண்பர்களோடு இருக்கும் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும், சிவ் நிஷாந்த், விமல் ராஜா,
விமர்சனம்

பிஸ்தா – திரைப்பட விமர்சனம்

மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நடக்கும் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதையே தொழிலாகக் கொண்ட நாயகன் மெட்ரோ சிரிஷுக்கு திருமணம் செய்வதில் ஏகப்பட்ட தடைகள். காதலியும் கைவிட்டுவிட்டுப் போன நிலையில் அவருக்குத் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் பிஸ்தா.  மெட்ரோசிரிஷ் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்கிறார். காதலி
விமர்சனம்

பொன்னியின் செல்வன் – திரைப்பட விமர்சனம்

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் வந்தேவிட்டது. ஆதித்த கரிகாலனாக திரைமுழுதும் விக்ரம் தோன்றும் காட்சியில் ஒரு மாபெரும் காவியத்தின் தொடக்கம் எனப் புளங்காகிதத்துடன் நிமிர்ந்து உட்காருகிறோம். ஆதித்தகரிகாலன் வேடம் இவ்வளவுதானா? இன்னும் இருக்கா? என்று கேட்குமளவுக்கு அந்த வேடத்தின் வீரத்தை,கோபத்தை, ஏக்கத்தை தன் தேர்ந்த நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம்.
விமர்சனம்

நானே வருவேன் – திரைப்பட விமர்சனம்

இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் கதிர் மற்றும் பிரபு ஆகியோரில் பிரபு நல்லவன் கதிர் கெட்டவன். பெற்ற் அப்பாவையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் வெளியூர் போய்விடுகிறார் அவர்களுடைய தாய். சென்னையில் ஒருவர் வட இந்தியாவில் ஒருவர் என வளரும் அவர்கள் இருவரும் கால்நூற்றாண்டுக்குப் பின் சந்திக்க வேண்டிய கட்டாயம். அந்தக் கட்டாயம் என்ன? எதானால் அப்படி நடக்கிறது? என்பதைப்
Uncategorized விமர்சனம்

பபூன் – திரைப்பட விமர்சனம்

நாடகங்களில் பபூன் எனப்படும் கோமாளி வேடம் போடும் வைபவ், நாடகக் கலை நலிந்து வருவதால் அத்தொழிலை விட்டு வெளிநாடு போய்ப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். வெளிநாடு செல்வதற்கான பணம் சேர்க்க ஓரிடத்தில் சுமையுந்து ஓட்டுநர் பணிக்குச் செல்கிறார். உப்பென்று நினைத்து அவர் ஓட்டிவந்த சுமையுந்தில் போதைப்பொருள் இருக்கிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள். அவற்றையெல்லாம் எப்படி