அநாதைகளைப் பற்றி நினைக்க யாருக்கும் நேரமில்லை எனவே அவர்களை வைத்து நான் பெரிய வியாபாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்புகிறார் ஒருவர். அவருடைய எண்ணத்தில் இடியாய் இறங்குகிறார் ஒரு காவல்துறை அதிகாரி. துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா போல் ஆக்ரோசமாகப் பாயும் அந்தக் காவல் அதிகாரியை வில்லன் எப்படி
விமர்சனம்
ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? என்பதை உயரதிகாரிகள் விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் டிராமா. ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன. சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான
சாதிய இறுக்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் காக்காமுட்டை விக்னேஷ் நாயகி ஆரா ஆகிய இருவரும் ஒரேவகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நீங்கள் நினைப்பதுதான் நடக்கிறது. ஆனால் அதன் அடிப்படைக் காரணம் மாறிவிடுவதுதான் இப்படத்தில் புதிது. நாயகன் விக்னேஷ்,
மிகப்பெரிய தாதாவான அரவிந்த்சாமியைக் கொலை செய்ய எதிரிகள் பெரும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதில் அவருக்கு சுயநினைவு தவறிவிடுகிறது. அவருக்கு நினைவு திரும்பினால் காணாமல்போன பலகோடி மதிப்பிலான தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். இதற்காக குஞ்சக்கா போபனை நியமிக்கிறது ஒரு குழு. அவரும் அரவிந்த்சாமியுடன் நட்பாகப் பழகி நினைவு திரும்ப வைக்க முயல்கிறார். அதன்பின் என்ன நடந்தது? என்பதைச்
எளியமனிதர்கள் வாழ்க்கையில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார வர்க்கம் ஆடும் கொடூர ஆட்டத்தைப் படம் பிடித்து அதிர வைத்திருக்கும் படம்தான் ஆதார். கட்டிடத் தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா. வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, சென்னை வந்து, ஒர் வளரும் கட்டிடத்தில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரித்விகாவுக்குக் குழந்தை பிறக்கிறது.குழந்தை பிறந்த
நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவருக்கு ஒரு காதல். திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை. நெஞ்சு நடுங்கும் அச்சோதனையை அனுபவிக்கும் அவர், அதன்பின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சினம். மீசை இல்லாத நிலையிலும் காவல்துறை உதவி ஆய்வாளர் வேடத்துக்குரிய மிடுக்குடன் இருக்கிறார் அருண்விஜய்.
உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் ஓர் இசைக்கலைஞராகவும் இருக்கிறார். எந்நேரமும் மது, மாது என்று இருக்கிறார். அவர் பற்றி நன்றாகத் தெரிந்தும் காதலிக்கிறார் ஒரு பெண். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் டூடி படம். இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பதோடு படத்தொகுப்பாளர் சாம்.ஆர்டி எக்ஸ் உடன் இணைந்து திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார் கார்த்திக் மதுசூதன். இவற்றோடு
தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து் வாழ்வாதாரம் தேடி மும்பைக்குச் செல்கிறார் சிம்பு. அங்குபோய் ஓர் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்கிறார். உணவுவிடுதி வேலையைத் தாண்டி இன்னொரு இருள் உலகம் அங்கு இருக்கிறது. அதற்குள் விருப்பமில்லாமலே நுழையும் சிம்பு அதன்பின் என்னவாகிறார்? என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. மீசைகூட இல்லாமல் அச்சுஅசலான்
கணம் அம்மா பாசத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம். இசைக்கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் ரமேஷ் திலக், திருமணத்துக்குத் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சதீஷ். பள்ளியிலிருந்தே இணைபிரியா நண்ர்களான இவர்கள் மூவருக்கும், தனித்தனியே தேவைகளும் ஆசைகளும் உண்டு. ஆனால், அவற்றை அடைய முடியாத வாழக்கை. இந்தச் சூழலில் காலம் கடக்கும்
பாலியல் தொழில் செய்யும் சாயாசிங்குக்கு அதனால் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அதன்பின் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறொரு வேலைக்குப் போய் குழந்தையை வளர்த்து வருகிறார். பெரும் சோதனையாக அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நோய் வந்துவிடுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் தந்தையின் எலும்புமஜ்ஜை இருந்தால்தான் முடியும் என்கிற நிலை. அதனால் அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்று
























