பொருளீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காக எத்தகைய அநியாயங்களையும் அலட்சியமாகச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றிற்குத் துணைபோகும் அரசாங்கங்கள் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கொடூர பாதிப்புகள் ஆகியனவற்றை திரைமொழியில் சொல்லியிருக்கும் படம் கலகத்தலைவன். நாயகன் உதயநிதி
விமர்சனம்
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிரதாப்போத்தன், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனை அணுகுகிறார். நரேன் அந்த வழக்கைக் கையிலெடுத்து அந்தப் பெண்ணைத் தேடும் அதேநேரம் சிபிஐ அதிகாரி நட்டியும் அந்தப் பெண்ணைத் தேடுகிறார். யார் அந்தப் பெண்? எதற்காகத் தேடுகிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம், யூகி.
ஒரு மாபெரும் புதையலைத் தேடிச் செல்லும் கதை. சாகசப் பயணங்கள், குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாராகியிருக்கும் படம் செஞ்சி. பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வரும் நாயகி சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறார்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உள்ளே நுழைகிறார்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள்
வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர நேர்மையாக உழைத்து முன்னேறவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தவறான வழியிலும் பொருளீட்டலாம் என்று சொல்லியிருக்கும் மலையாளப் படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இளம் வழக்கறிஞர் வினீத்சீனிவாசன் தன் தாயுடன் வசித்து வருகிறார். வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அந்தநிலையில் அவரது அம்மா வீட்டில் விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்.அவருடைய
வெறுப்பை விதைப்பதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்று விஜய்சேதுபதி குரலில் தொடங்கும் பரோல் திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்திருக்கிறது. கோவலன் கரிகாலன் ஆகியோரது அம்மா ஆராயி ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல அடுக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையால் படம் சுவாரசியமாக நகர்கிறது. கரிகாலனாக நடித்திருக்கும் லிங்கா, கோவலனாக நடித்திருக்கும்
ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகள். திவ்யதர்ஷினி இவர்களின் சகோதரி. இவர்களில் ஸ்ரீகாந்த்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. ஜீவாவுக்கும் ஜெய்க்கும் திருமணம் நடத்த அப்பா பிரதாப்போத்தன் முடிவு செய்கிறார்.ஜீவா, ஐஸ்வர்யாதத்தாவுடன் மூன்றாண்டுகளாகச் சேர்ந்து வாழ்கிறார்.அவரையே அவருக்குத் திருமணம் செய்வது என்றும், ஜெய்க்கு மாளவிகா சர்மாவை மணமுடிப்பது
காதலில் நம்பிக்கை வேண்டும் என்று சொல்லியிருக்கும் படம் லவ்டுடே. நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார். அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றை எப்படி
ஓர் அழகான காதல்கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல் டைம்லூப் வகை திரைக்கதையையும் கலந்து வெளிவந்திருக்கும் படம் பனாரஸ். நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக் குழம்பி நிற்கும் நேரங்களிலும் தேர்ச்சி பெறுகிறார். நாயகி சோனல் மாண்ட்ரியோ அழகும்
எங்கள் மண் எங்களுக்கே எனும் மண்ணுரிமைப்போராட்டத்தை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான காந்தாரா மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அதற்கு இணையாக மலையாளத்தில் வெளியாகி வரவேற்புப் பெற்றிருக்கும் படம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு. தொப்பையும் தொந்தியுமாய் இருப்பதோடு எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. கேரளாவின் கண்ணூர்
காதல் படங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். காலங்களில் அவள் வசந்தம் எவ்விதம்? வருடத்துக்கு ஒரு பெண்னைக் காதலித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் ஆகிவிடுகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி சொல்கிறார். அதிர்ந்து போகும் அவர், அதற்குப் பின் என்ன முடிவெடுக்கிறார்?
























