September 27, 2026
Home Archive by category விமர்சனம் (Page 58)

விமர்சனம்

விமர்சனம்

181 – திரைப்பட விமர்சனம்

எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவே இல்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181. ஒரு திரைப்பட இயக்குநர் புதிய திரைக்கதை
விமர்சனம்

கட்சிக்காரன் – திரைப்பட விமர்சனம்

எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறவர்கள் அரசியல்கட்சித் தொண்டர்கள்.அவர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம்தான் கட்சிக்காரன்.கட்சித் தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன்,அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் இழப்பீடு கேட்பதும்தான் கதை. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் அப்பாவி
விமர்சனம்

விஜயானந்த் – திரைப்பட விமர்சனம்

கன்னடத்தின் முதல் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் எனும் பெருமையுடன் வந்திருக்கும் படம் விஜயானந்த். பதிப்புத்துறையில் இருக்கும் அப்பா வழியில் அத்துறையில் ஈடுபடாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேவரின் வாழ்க்கைக் கதை உண்மைக்கு மிக நெருக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளது. அவருடைய வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், அவராகவே
விமர்சனம்

குருமூர்த்தி – திரைப்பட விமர்சனம்

பெரிய தொழிலதிபரான ராம்கி ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தித் தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு சலசலப்பு வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அதை ஒரு திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது.பயத்தினால் ஒருவர்
விமர்சனம்

விட்னஸ் – திரைப்பட விமர்சனம்

நாம் அன்றாடம் தெருக்கூட்டும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம் குப்பை அள்ளும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம், நாம் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அவர்கள் வாழ்நிலையைப் பார்த்து அதை நமக்கும் காட்டி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் தீபக். படித்துப் பட்டதாரியாகி வேலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்கி அம்மாவை ஓய்வாக வைத்திருக்க விரும்பும் இளைஞன் திடீரென மரித்துப்போகிறான்.அவனுடைய
விமர்சனம்

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

நாயகன் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம் டிஎஸ்பி. திண்டுக்கல்லில் பூக்கடை நடத்தும் இளவரசுவின் மகனாக ஜாலியாகச் சுற்றிக்
விமர்சனம்

கட்டாகுஸ்தி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை.  அதேகாலத்தில் கேரளமாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யாலட்சுமிக்கும் அவர் வீராங்கனை என்பதாலேயே மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஆயிரம் பொய்
விமர்சனம்

வதந்தி – இணையத் தொடர் விமர்சனம்

ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாதபடி பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி
விமர்சனம்

பட்டத்து அரசன் – திரைப்பட விமர்சனம்

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊருக்காகக் கபடி விளையாடி வரும் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். அதே ஊர்க்காரர்கள் அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது? அதற்கு யார் காரணம்? அதை ராஜ்கிரண் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் பட்டத்து அரசன். மூத்த கபடி வீரர் பொத்தாரி என்பவரைப்
விமர்சனம்

காரி – திரைப்பட விமர்சனம்

ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்