இங்கிருப்பவர்கள் காசிக்குப் போக ஆசைப்படுவார்கள் காசியில் இருப்பவர்களுக்கோ இராமேஸ்வரம் வர ஆசை. ஒரு தீபாவளி நாளில் இராமேஸ்வரத்துக்கு வரும் வட இந்தியக் குடும்பம் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திப்பதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளும்தாம் அயோத்தி படம். வட இந்தியக்குடும்பத் தலைவராக நடித்திருக்கும்
விமர்சனம்
பெண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பாலியல் சிக்கல்கள அதன் விளைவுகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் படங்கள் வரிசையில் சேரும் படம் அரியவன். அறிமுக நாயகன் இஷான் கபடி வீரராக இருப்பது அவர் செய்யும் செயல்களுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. சண்டைக்காட்சிகளை நன்றாகச் செய்வதோடு இல்லாமல் காதல் காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார் நாயகன் இஷான்.
கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்களுக்காக,ஓர அறிவியலாளர் பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட நவீன கைபேசி ஒன்றை உருவாக்குகிறார். அதை பல கோடிக்களுக்கு விற்றுப் பணம் பார்க்க வேண்டும் என பகவதி பெருமாள் ஆசையில் மண்ணைப்போட்டு திருட்டுப்போகிறது. சிம்ரன் என்று பெயர் கொண்ட அந்த கைபேசி,உணவு விநியோக வேலை பார்க்கும் நாயகன் சிவாவிடம்
இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் அதை யாருமே மதிப்பதில்லை. இந்நூற்றாண்டின் மாபெரும் வியாபாரப் பொருளாகியிருக்கிறது
சிவபக்தர் செல்வராகவன், அதிரடியாகச் சில கொலைகள் செய்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி நட்டி, தன் அண்ணன் மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் இணைகிறார்கள்.அது எதனால்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பகாசூரன். முந்தைய படங்களில் ஒரு சார்பெடுத்துப் பேசிய இயக்குநர் மோகன்ஜி, இந்தப்படத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான சிக்கலைப் பேச
இரு கோடுகள், விஸ்வாசம் இந்த இரண்டையும் எடுத்து ஒரு ஜாரில் போட்டு மிக்சியில் அரைத்தால் கிடைக்கும் ஜூஸ்தான் டாடா. ஆனால் இதில் கலக்கப்பட்டுள்ள சுவை வேறு மாதிரியானது. அதைத்தான் டாடா வேறுபடுத்திக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கவினும் அபர்ணா தாசும் காதலிக்கிறார்கள். இதில் அபர்ணா கர்ப்பமாகிறார். இருவரையும் அவரவர் குடும்பங்கள் கைகழுவி விட, நண்பர்கள் உதவியுடன் ஒரு
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கார்த்திக் சிங்கா, அந்த இல்லத்துக்குக் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம். இதற்குள் காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். நாயகன் கார்த்திக்சிங்கவுக்கு காதல், சண்டை, பாசம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்
இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா 1963 ஆம் ஆண்டு கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு 2023 இல் வடிவம் கொடுத்திருக்கும் படம் பிகினிங். முழுமையான திரையை சரிபாதியாகப் பிரித்து இரண்டு காட்சிகள் ஓடுகின்றன. வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று காட்டுவார்கள். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். வினோத்கிஷனின்
மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல். சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார். அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது.
அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள் அதனால் பல பாதிப்புகள் ஆகியனவற்றை அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள். 1990 இல் அந்த ஊரில்























