Home Archive by category விமர்சனம் (Page 52)

விமர்சனம்

விமர்சனம்

வாரிசு – திரைப்பட விமர்சனம்

அம்பானி அதானி போன்ற ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார். அவர் மனைவி ஜெயசுதா, மூத்தமகன் தெலுங்குநடிகர் ஸ்ரீகாந்த், அடுத்த மகன் ஷாம். மூன்றாவதுமகன் தான் விஜய். அப்பாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் வீட்டை விட்டுப் போய் தனியாக வசிக்கிறார். அம்பானி வீடாக இருந்தாலும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள். ஒரு
விமர்சனம்

துணிவு – திரைப்பட விமர்சனம்

ஒரு தனியார் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டு ஒரு கூட்டம் அந்த வங்கி உள்ளே நுழைகிறது. துப்பாக்கிகளைச் சுட்டுக் கொண்டே உள்ளே போய் மக்களை மிரட்டிப் பணிய வைக்கிற நேரத்தில் அங்கே உள்ள ஒருவர், கொள்ளையர்களை மடக்குகிறார். அவர்தான் அஜீத். கொள்ளையர்களை அவர் மடக்கிப் பிடித்துத் துப்பாக்கி முனையில் வைக்கிற நேரத்தில் எலோரும் கைதட்டி அவரைப் பாராட்டுகிறார்க்ள். அப்போது, நானும்
விமர்சனம்

வி 3 – திரைப்பட விமர்சனம்

ஆடுகளம் நரேன் வீடுவீடாக செய்திதாள்கள் விநியோகிக்கும் பணி செய்துவருகிறார். அவருக்கு பாவனா, எஸ்தர் அனில் ஆகிய இரண்டு மகள்கள். ஒருநாள் மூத்தமகள் பாவனா ஒரு கூட்டத்திடம் சிக்கி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல். இரவு பத்துமணியளவில் நடக்கும் அந்தக் கொடுமைக்கு விடிவதற்குள் நியாயம் கிடைக்கும் என்கிறார் முதலமைச்சர். அதற்கேற்ப அக்குற்றத்தில்
விமர்சனம்

ராங்கி – திரைப்பட விமர்சனம்

ஓர் இணையதள செய்தி ஊடகத்தில் பணிபுரியும் த்ரிஷாவின் 16 வயது நிரம்பிய அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அதைச் சரிசெய்யப் போக அது உலக அளவிலான இன்னொரு பெரும் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. அவற்றை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராங்கி. படத்தின் பெயருக்கேற்ற வேடம் த்ரிஷாவுக்கு. நடை உடை பாவனைகளில்
விமர்சனம்

டிரைவர் ஜமுனா – திரைப்பட விமர்சனம்

வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் அப்பா திடீரென இறந்துவிடுகிறார். அதனால் அம்மாவும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா ஓட்டிய வண்டியை ஓட்டத் தொடங்குகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். ஒருநாள் அவருடைய வண்டியில் கூலிப்படையினர் ஏறுகிறார்கள். அவர்களைக் காவல்துறை துரத்துகிறது.கூலிப்படையினர் ஐஸ்வர்யாராஜேஷை பணயக்கைதி போல்
விமர்சனம்

செம்பி – திரைப்பட விமர்சனம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாட்டி வீராயி (கோவைசரளா) பேத்தி செம்பி (நிலா) ஆகியோர் தேன்,காட்டுமுட்டை உள்ளிட்ட பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பேத்தி செம்பியைப் படிக்க வைத்து மருத்துவராக்க வேண்டுமென்பது பாட்டியின் கனவு. ஒருநாள் சிறுமி செம்பிக்கு நடக்கும் கொடூர நிகழ்வு அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. அதை வீராயி எப்படி
விமர்சனம்

கடைசி காதல் கதை – திரைப்பட விமர்சனம்

காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் கடைசிகாதல்கதை. அறிமுக நடிகர்
விமர்சனம்

உடன்பால் – திரைப்பட விமர்சனம்

இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொல்வடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்வதுதான் உடன்பால். இந்தப்பெயரை வைத்துக்கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால். சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு
விமர்சனம்

ஜாஸ்பர் – திரைப்பட விமர்சனம்

நிழலுக தாதாவாக இருக்கும் ஜாஸ்பர், தன் மனைவி கொல்லப்பட்டதும் அந்தத் தொழிலை விட்டு ஒதுங்கி வாழ்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கடத்தப்பட்டதும் மீண்டும் களமிறங்குகிறார். அது எதனால்? என்பதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் ஜாஸ்பர். தற்கால ஜாஸ்பர் வேடத்தில் சி.எம்.பாலாவும் இளவயது ஜாஸ்பராக
விமர்சனம்

பிராஜெக்ட் சி – பாகம் 2 – திரைப்பட விமர்சனம்

ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு அதன் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் பிராஜெக்ட் சி பாகம் 2. புதுமுக நாயகன் ஸ்ரீ, விஞ்ஞானியாக ராம்ஜி, விஞ்ஞானி வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதாகிருஷ்ணமூர்த்தி, மருத்துவராக சாம்ஸ் ஆகியவர்களோடு மேலும் ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோ. நாயகன் ஸ்ரீ