நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி என்று வீரசிவாஜி படத்தில் பாடல் எழுதினார் அருண்ராஜாகாமராஜ். அவருடைய வரிகளுக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி சொப்பனசுந்தரி படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி,
விமர்சனம்
கோவை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பேய் பலரைக் கொல்கிறது. அப்படிக் கொல்லப்படுவர்களிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமை என்ன? அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? என்பனவற்றை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் ரிப்பப்பரி. மாஸ்டர் மகேந்திரன் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்தின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் பயப்பட்டு நம்மைச் சிரிக்க
அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் நிறைந்திருக்கும் தற்காலத்திலேயே இரக்கமற்ற முறையில் தொழிலாளர்களை வதைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. 1947 ஆம் ஆண்டில் எப்படி இருந்திருக்கும்? செங்காடு எனும் கிராமம்,அங்கு வாழும் மக்களுக்கு நெசவுத்தொழிலே பிரதானம். அம்மக்களீன் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயன், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு
கனிமவளக் கொள்ளை அதற்கெதிரான மக்கள் போராட்டம், அவற்றை தந்திரமாகவும் ஆணவமாகவும் ஒடுக்கத் துடிக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் ஆகியனவற்றோடு காவல்துறைக்குள்ளேயே நடக்கும் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது விடுதலை. கடைநிலைக் காவலர் குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் சூரி. சும்மா சிரிக்க வைத்துவிட்டுப் போகிற ஆள் மட்டும் இல்லை,
இதிகாசத்தில் இராமனை எதிர்ப்பவன இராவணன்.இந்த பத்துதல யில் அரசியல் இராமர்களை எதிர்க்கிறார் இராவணன். பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு. அன்பும் பாசமும் நிறைந்த அழகான வாழ்க்கையிலிருந்து கரடுமுரடான வாழ்க்கைக்குள் வந்தாலும் அடிமனசின் ஈரம் காயாத வேடம் சிம்புவுக்கு. கவுதம்கார்த்திக்,
இணையத்தொடர்களுக்குத் தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ஆபாச அலம்பல்கள் என்று தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி செங்களம் இணையத்தொடரில், அரசியலில் நடக்கும் நம்பவியலாச் செயல்களைக் காட்சிப்படுத்தி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். விருதுநகர் நகராட்சியைக் கதைக்களமாகக்
சின்னச் சின்ன திருட்டுகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபடும் குற்றவாளி நாயகன் நிஷாந்த் ரூசோ.ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் நேரத்தில்,காட்டுக்குள் ஒருவர் பிணமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வருகிறது. அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின்
முழுக்க முழுக்க சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். காவல்நிலையத்தின் பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இது காவல்துறை சார்ந்த படமாக இருக்குமா? என்றால் இல்லை.காசிமேடு பகுதி வாழ் மக்களை அதிகார வர்க்கம் தம் சுயநலத்துக்காக எவ்வாறு பலி கொடுக்கிறார்கள்? என்பதைச் சொல்வதுதான் படம். மைக்கேல் தங்கதுரை,
குருவிராஜன் என்கிற தாதாவை மையமாகக் கொண்ட கதை என்பதால் இந்தப் பெயர். நடிகர் அர்ஜை குருவிராஜன் என்கிற தாதாவாக நடித்திருக்கிறார்.காவல்துறைக்கு தண்ணிகாட்டும் தாதா அவர். அவரை வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒர் சாமான்யனாக நடித்திருக்கும் ஆஷிக்ஹுஷைன் ஒருகட்டத்தில் தாக்கிவிடுகிறார். காவல்துறையே பயப்படும் ஒருவரை சாதாரண ஒரு ஆள் தாக்கினால் என்னவாகும்? இவ்வளவு பதட்டமான கதையை
விமானப்படை வீரராக இருந்து சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய தாதாவாகிறார் உபேந்திரா. அவருக்கு ஒருபக்கம் மற்ற தாதாக்களின் தொல்லை இன்னொருபக்கம் காவல்துறை தொல்லை.உபேந்திரா ஏன் தாதா ஆனார்? இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். இந்தியா மிரளும் தாதா என்பதற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார் உபேந்திரா. கட்டுக்கோப்பான உடல் துடிப்பான நடிப்பு ஆகியனவற்றால் நல்ல வரவேற்பைப்
























