காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் சொல்லிவிட்டு பல குற்றங்கள் நடக்கின்றன. தொடக்கத்தில் அந்தத் தகவலை அலட்சியப்படுத்தும் காவல்துறை, ஊடகங்களுக்குச் செய்தி தெரிந்து சிக்கல் பெரிதானதும் தீவிரமாகக் களமிறங்குகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? முன்கூட்டியே தகவல் சொல்லும் மர்மநபர் யார்?
விமர்சனம்
ஒரு கிராமம், அங்கு நடக்கும் மர்ம மரணங்கள், அவற்றிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன் என்கிற வழக்கமான விசயத்துக்குள் மர்ம மரணங்களுக்கான காரணம் தெரியவரும்போது வியப்பை ஏற்படுத்தும் படம் விரூபாக்ஷா. நாயகன் சாய்தரம்தேஜ், தெலுங்கிலிருந்து வந்திருக்கிறார். யுவதிகளைக் கவரும் அழகும் துடிப்பான நடிப்பும் அவருடைய பலம். முக்கியத்துவம் குறைந்த கதை என்றாலும் தன் இருப்பை
ஆதித்த கரிகாலன் மீது கொலைவெறியில் இருக்கும் நந்தினி, உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று ஐயம்கொள்ளும் நிலையிலுள்ள பொன்னியின்செல்வன் மற்றும் வந்தியத்தேவன், அதிர்ந்து நிற்கும் குந்தவை ஆகியனவற்றோடு நிறைவு பெற்றது முதல்பாகம். இரண்டாம் பாகத்தில் பொன்னியின்செல்வன் உயிரோடு வருகிறார், அவருக்கு முடிசூட்டப்பட்டதா? ஆதித்தகரிகாலன் உயிர் தப்பினாரா? குந்தவை மற்றும் வந்தியத்தேவன் நிலை
காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான மகனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவரும் விஜய் ஆண்டனிக்கு திடீர் சோதனையாக மகனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம். அதற்காக மருத்துவமனை செல்லும்போது அங்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்குகிறார் விஜய் ஆண்டனி. அதற்காக அவர்
நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்து வந்த ரமேஷ்திலக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் யானை முகத்தான். பெயரைப் பார்த்ததுமே இது விநாயகக் கடவுள் சம்பந்தப்பட்ட படம் என்பது தெரிந்துவிடும். நாயகன் ரமேஷ்திலக் தீவிர விநாயக பக்தர்.ஆட்டோ ஓட்டும் தொழிலில் இருக்கும் அவர் அதைச் சரியாகச் செய்யாமல் எல்லோரையும் ஏமாற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.அதனால் ஒரு கட்டத்தில் அவர்
தங்கைக்குத் திருமணம் செய்ய முயலும் விமலுக்கு உள்ளும் புறமும் தடைகள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்னவாகிறது? என்பதுதான் தெய்வமச்சான் படத்தின் கதை. தங்கைக்குத் திருமணம் என்றால் வரப்போகிறவர் மச்சான் தானே. அதுதான் தெய்வமச்சான் பெயருக்குக் காரணம். களவாணி, கலகலப்பு போன்று ஏற்கெனவே பல நகைச்சுவைப் படங்களில் நடித்திருக்கும் விமல், இந்தப்படத்தில் மிக எளிதாக
யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். கதைக்களமோ மிகப் பழையது. ஆனால் தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகிற்கும் புதிது. ஏழாம் நூற்றாண்டில், நாகரீகமடைந்து வைதீகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு பேரரசாக இருக்கும் பாண்டிய அரசினை, பழங்குடிகளாக இருக்கும் எயினர்கள் எதிர்த்துக் கலகம் புரிந்து ஒரு கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்
சாகுந்தலா கதையில், சாகுந்தலா விஸ்வாமித்திர முனியர் மூலம் மோனகாவுக்கு பிறந்த குழந்தை. பிறக்கும்போதே ஆதரவற்றவளாக இருக்கும் சாகுந்தலாவை கண்வ மகரிஷி தனது சொந்த மகளாக வளர்க்கிறார். சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சகுந்தலாவும்
அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வரும் ராகவா லாரன்ஸுக்கு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அதைச் சமாளிக்க வெளிநாடு வேலைக்குப் போகிறார். கொஞ்சநாளில் மனைவி பிரியாபவானிசங்கரையும் அழைத்துச் செல்கிறார். ராகவாலாரன்ஸுக்கு முன்பே ஊர் திரும்புகிறார் பிரியாபவானிசங்கர். அடுத்து அம்மா மரணம், மனைவி காணாமல் போதல் எனத் தொடரும் சிக்கல்கள். இவற்றை ராகவாலாரன்ஸ் எப்படி
நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி. கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார்.
























