2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.அவர், தற்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.‘படைத் தலைவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்கிறார்கள்.
செய்திகள்
விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர்
இயக்குநர் சேரன் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் படத்தை இயக்கியிருந்தார்.அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன்பின்,ஜர்னி என்ற பெயரில் ஓர் இணையத் தொடரை இயக்கினார் சேரன்.இவ்வாண்டு தொடக்கத்தில் சோனி லிவ் இணையதளத்தில் அத்தொடர் வெளியானது. இவற்றுக்கிடையில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்திருந்தார். 2023
நடிகர் அஜீத் இப்போது, விடாமுயற்சி. குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் விடா முயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி கோட் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தனித் திரையரங்குகள் ஒவ்வொன்றாகக் குறைந்து பல்திரை அரங்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.இன்னும் கொஞ்ச காலத்தில் தனித் திரையரங்குகளே இல்லை எனும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். பல்திரை அரங்குகளை இந்தியா முழுவதும் நிறுவி இந்தியத் திரையுலகில் கோலோச்சும் நிறுவனமாக பிவிஆர் நிறுவனம் திகழ்கிறது. பிவிஆர் நிறுவனத்துக்கு சென்னையில் மட்டும் 105 திரைகளும் தமிழ்நாடு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டுக்கூட்டம் சென்னையில் ஜூலை மாதம் 26 ஆம் தேதி நடந்தது. அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில்… இன்றைய
கோவையிலிருந்து சென்று அமெரிக்காவில் தொழிலதிபராக இருப்பவர் பாபிபாலச்சந்திரன். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர்.300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம். அவர் தமிழ்த் திரைப்படத்துறைக்குள் தயாரிப்பாளராக நுழைந்துள்ளார். அண்மையில் வெளியான
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.அவர்களோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம்
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து. இவர் கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர்.





















