சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் முத்தையா அருள்நிதி இணையும் படம் – விவரம்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாட்களோடு நின்றிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.ஆகஸ்ட் மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொன்னார்கள்.ஆனால் நடக்கவில்லை.

அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றில் பிரபுஜெயராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல் நீண்டு கொண்டே போனதால் ஆகஸ்ட் மாதம் இந்தப்படம் தொடங்கவில்லையாம்.

சில பல தாமதங்களைத் தாண்டி இயக்குநர் முத்தையா இயக்ககும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் க்லந்து கொண்டிருக்கிறார் அருள்நிதி.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.ஹரீஷ்பேரடி வில்லனாக நடிக்கிறார்.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

முத்தையா இயக்கம் என்றால் அது கிராமத்துக்கதையாகத் தான் இருக்கும் என்பதை மாற்றி முழுக்க முழுக்க நகரம் சார்ந்த படமாக இந்தப் படத்தை எடுக்கவிருக்கிறாராம்.

குத்துச்சண்டைப் போட்டிகளை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அர்ள்நிதி குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்தும் உடல் எடை கூட்டியும் தயாராகியிருக்கிறார் அருள்நிதி.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் குத்துச்சண்டைப் போட்டியை மையமாகக் கொண்டு உருவான படம்.அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அப்படத்தின் இரண்டாம்பாகத்தைத் தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தப்படமும் குத்துச்சண்டைப் போட்டியை மையமாகக் கொண்ட படம் என்பதால் கூடுதல் கவனம் பெறும் என்பதில் மாற்றமில்லை.

இயக்குநர் முத்தையாவைப் பொறுத்தவரை மிக வேகமாகப் படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகளை முடித்து வெளியீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்.

இப்படம் ஏற்கெனவே விக்ரம்பிரபு இலட்சுமி மேனன் உள்ளிட்டோரை வைத்து முத்தையா இயக்கிய புலிக்குத்தி பாண்டி படம் போல் நேரடியாக தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் படம் முழுமையாக்த் தயாரான பின்னர் மனம் மாறி திரையரங்குகளில் வெளியானாலும் ஆகலாம் என்றும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts