Home Archive by category செய்திகள் (Page 117)

செய்திகள்

சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் கலாட்டா கல்யாணம் – விரைவில் வெளியீடு

ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். தனுஷ் நடிப்பில் மூன்றாவது இந்திப்படம் தயாராகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார்.
சினிமா செய்திகள்

எனிமி நட்டம் – விஷாலின் புதிய படத்துக்குச் சிக்கல்

விஷால்,ஆர்யா நடிப்பில் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் உருவான எனிமி படம் தீபாவளி நாளில் வெளியானது. அந்தப்படம் சுமார் மூன்று கோடிக்கு மேல் நட்டத்தைச் சந்தித்துள்ளதாம். இதனால் விஷால் நடிப்பில் தொடங்கவிருக்கும் அடுத்த படம் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறதாம். எனிமி படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான
சினிமா செய்திகள்

கண்ணீர் விட்ட சிம்பு கதறிய இரசிகர்கள் திகைத்த படக்குழு – மாநாடு நிகழ்ச்சியில் பரபரப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என
சினிமா செய்திகள்

வடசென்னை படப் பெயர் சொல்லி பெரும் மோசடி – படக்குழு அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும்போதே இதன் இரண்டாம்பாகம் வெளிவரும் என்று சொன்னார்கள். ஆனால், வெற்றிமாறனும் தனுஷும் தனித்தனியே வெவ்வேறு படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் வடசென்னை 2 நடக்குமா? என்பதே ஐயமாக இருக்கிறது. உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஒரு முகமறியா கூட்டம், வடசென்னை 2 படத்துக்காக புதுமுக நடிகர்கள் தேர்வு
சினிமா செய்திகள்

குடும்பத்தோடு சென்னையை விட்டுச் சென்ற ஏ.ஆர்.ரகுமான் – காரணம் என்ன?

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பொன்னியின்செல்வன்,அயலான்,கோப்ரா உள்ளிட்ட நான்கைந்து படங்கள் இருக்கின்றன. இந்தியில் தனுஷ் நடித்திருக்கும் அட்ராங்கிரே படமும் இருக்கிறது.  இவ்வளவு படங்கள் இருக்கும்போதும் கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் இல்லை. குடும்பத்தோடு துபாயில் இருக்கிறாராம். எக்ஸ்போ 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் நடத்தப்படுகிறது. அக்டோபர் 2021 முதல் 31 மார்ச்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் 21 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கடுத்து புதுஇயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்படத்தை, டாக்டர் படத்தைத் தயாரித்த கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம். டாக்டர் பட வெளியீட்டின்போது தயாரிப்பு நிறுவனத்தக்கும் அவருக்கும்
சினிமா செய்திகள்

பிரபல நடிகர் திடீர் மரணம் – திரையுலகம் இரங்கல்

இயக்குநர், நடிகர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட கலைஞர் ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் இன்று திடீரென காலமானார். அவருக்கு வயது 61. 1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர்
சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் ஃபகத்பாசில் ஹீரோ விஜய்சேதுபதி வில்லன் – கமலுக்கு என்ன வேலை?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில், காளிதாஸ், நரேன் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16,2021 அன்று தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்துவருகிறது.டிசம்பர் முதல்வாரத்துக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். இப்படத்தில் கமல் ஒரு தாதாவாக நடிக்கிறாராம்.படத்தில் கமலுக்கு ஜோடி இல்லை. ஒரு மகன் உண்டு.
சினிமா செய்திகள்

ஜெய்பீம் சர்ச்சை – சூர்யா ரசிகர் மன்றம் அறிக்கை

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

சம்பளத்தைக் குறைத்தார் ரஜினி – திரையுலகம் வியப்பு

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றனவாம். அவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சு வந்தது. இப்போது அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. அப்படத்தை