Home Archive by category செய்திகள் (Page 119)

செய்திகள்

சினிமா செய்திகள்

உதயநிதியிடம் பேசினோம் திரையரங்குகள் கிடைத்தன – விஷால் வெளிப்படை

இவ்வாண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாள். அதையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான
சினிமா செய்திகள்

அண்ணாத்த – அதிகாரப்பூர்வ கட்டணக் கொள்ளை

நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. பெரிய நடிகர்கள் படம் என்றால் அதிகாலையிலேயே காட்சிகள் நடப்பது வழக்கம். ரஜினிகாந்த் படம் அதுவும் பண்டிகை நாளில்
சினிமா செய்திகள்

நேரம் மாறியது – அதிகாலையில் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம் நடந்தது

கன்னடத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார்(வயது 46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீரென மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது திடீர் மரணம், அவரது குடும்பத்தினர், இரசிகர்கள் மற்றும் கன்னட மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர்
சினிமா செய்திகள்

கன்னட சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத்ராஜ்குமார் திடீர் மரணம்

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமானார். அவருக்கு வயது 46. இது கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையே பெரும அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் என்ற
சினிமா செய்திகள்

சசி – ஹரீஷ்கல்யாண் இணையும் படத்தின் பெயர் இதுதான்

ஹரீஷ்கல்யாண் இப்போது இயக்குநர் சசி இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாம். முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடையும்வரை அப்படம் குறித்து எவ்விதத் தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வந்திருக்கின்றனர். இப்போது படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் அவையும் முடிவடையும் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

சி.வி.குமாரின் ஜாங்கோ பட டிரெய்லர் எங்கிருந்து சுடப்பட்டது தெரியுமா?

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது, முதல் திரைப்படமாக உருவாகிறது என்று அறிவிக்கப்பட்ட படம் ஜாங்கோ. இந்தப் படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி
சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் நடிக்கிறேன் – சூர்யா அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்,சொந்தத் தயாரிப்பில் பாலா
சினிமா செய்திகள்

கலாநிதிமாறனின் அதிரடி முடிவு – தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிர்ச்சி

தமிழ்த்தொலைக்காட்சிகளில் தொடங்கியதிலிருந்தே முதலிடத்தில் இருந்துவருகிறது சன் தொலைக்காட்சி. தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் மற்றும் வங்காளத்திலும் சன் குழுமம் தொலைக்காட்சிகளை நடத்திவருகிறது. இந்தியில் இந்நிறுவனம் வந்துவிடக்கூடாது என பல பெரிய நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வரவிடாமல் தடுத்துவருகின்றன என்று சொல்லப்படுகிறது.  இந்நிலையில் தற்போது சன்குழுமத் தலைவர்
சினிமா செய்திகள்

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கான புதிய சமூகவலைதளம் – சென்னையில் தொடக்கம்

நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா,டிவிட்ட்ர், முகநூல் போல் புதிய சமூகவலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.அதன் பெயர் ஹூட்.  முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில்,மக்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஆகியனவற்றைப் பதிய முடியும்.  இந்த ஹூட் தளத்தில் தங்கள் குரலிலேயே தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும் என்பதுதான் புதிது. இதன்மூலம் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும்
சினிமா செய்திகள்

பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் மறுப்பு – காரணம் என்ன?

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் திரிஷ்யம்.அப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இங்கும் அப்படம் வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், சீனம் ஆகிய மொழிகளிலும் திரிஷ்யம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.