விஷால்,ஆர்யா நடிப்பில் ஆனந்த்ஷங்கர் உருவாகியிருக்கும் எனிமி படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே
செய்திகள்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்னமூர்த்தியும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பணிபுரிகின்றனர். 2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின்
இசையமைப்பாளர் சி.சத்யாவின் இருபத்தைந்தாவது படமாக அமைந்துள்ளது அரண்மனை 3. அப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, படம் வெளியான பின்பு பின்னணி இசைக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்நிலையில் அவருடன் ஓர் உரையாடல்…. 1. அரண்மனை 3 உங்களுக்கு 25 ஆவது படம். அது அமைந்தது மற்றும் பணியாற்றிய அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்… 2011 இல் எங்கேயும்
விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 ஆம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சிக்குப் பெரும் பலமாக அமைந்த நிகழ்ச்சி. தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. இவ்வாண்டில் அதற்கு மிக நெருக்கமாக வந்துகொண்டிருந்தது விஜய் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சி 1100
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.இது கமல் நடிக்கும் 232 ஆவது படம். 2020 செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது. அதன்பின் கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி 2020 நவம்பர் 7 அன்று, அப்படத்தின்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.ஜேடி ஜெர்ரி ஆகியோர் இயக்குகிறார்கள். இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ்
ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அந்தோணிதாசன்
மா என்றழைக்கப்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு நேற்று (அக்டோபர் 10,2021) தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு ஆகியோர் முதன்மைப் போட்டியாளர்களாக இருந்தனர். இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் ஆந்திராவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கன்னட நடிகர் சங்கத்தில் அவர் போட்டியிடட்டும். இங்கே போட்டியிட அவருக்கு உரிமை இல்லை. தெலுங்குப் பட உலகைச்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் இன்று வெளியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் படம் திரையிடப்பட்டுவிட்டது. ஆனால், அதிகாலை நான்கு மணி வரை அப்பட வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது.
விஜய் இப்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் அந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று சொல்லப்படவில்லை. ஆனால், அதற்குள் விஜய்யின் 67 ஆவது படம் பற்றிய





















