தயங்கிய நிறுவனம் தயாரிப்பாளரை மாற்றிய தனுஷ்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.
அதற்கடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வெளியாகவிருக்கிறது.
இப்போது அவர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கடுத்து,ஹரிஷ்கல்யாண் நடித்த பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.
அப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.
இளன் சொன்ன கதை தனுஷுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம். அதேசமயம், அப்படத்தின் மொத்தச் செலவு காரணமாக சத்யஜோதி நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்க தயக்கம் காட்டியதாம்.
இந்நிலையில், பிரபல நிதியாளர் மதுரை அன்பு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க முடிவெடுத்து தனுஷை அணுகியிருக்கிறார்.
அவரிடம் தனுஷ், இளன் கதையைப் படமாக்கலாம் என்று சொல்ல அவரும் ஒப்புக்கொண்டாராம்.
எனவே, மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் இளன் தனுஷ் கூட்டணி இணையவிருக்கிறது என்கிறார்கள்.
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள்.











