September 13, 2026
சினிமா செய்திகள்

ஜெய்பீம் ; துணிந்து முன்வந்த கலைஞர் டிவி

சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்த்துவிட்டு பாராட்டியது நினைவுக்கூறத்தக்கது.

சமீபத்தில், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டிவி உரிமை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. இப்படத்துக்கு குறிப்பிட்ட சாதியினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக, புதிய படங்களை போட்டிப் போட்டு வாங்கும் விஜய் டிவி மற்றும் ஜீ டிவி இப்படத்தை வாங்க முன்வரவில்லை. டிவியில் ஒளிபரப்பாகும் போது ஏதும் சிக்கல் வரலாம் என்று கருதியிருக்கலாம்.

இந்நிலையில், ஆளும் கட்சியின் சேனலென்பதால் கலைஞர் டிவி துணிச்சலாக முன்வந்திருக்கிறது. அதோடு, இப்படமானது சுமார் 10 கோடிக்கு விலை போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியும், வருகிற பொங்கல் தினத்துக்கு டிவியில் ஒளிபரப்பாகுமாம்.

Related Posts