பிகில் கதைத் திருட்டு – படக்குழுவின் சதியை உடைத்த உதவி இயக்குநர்
விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தின் கதைத் திருட்டு தொடர்பாக கே.பி.செல்வா எனும் உதவி இயக்குநர் தொடர்ந்திருந்த வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் தள்ளுபடி ஆனது.
அதற்குக் காரணம் இதுபோன்ற வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கவேண்டும் என்று கூறப்பட்டதால் கே.பி.செல்வா வழக்கைத் திரும்பப் பெற்றார். எனவே தள்ளுபடி ஆனது.
அதன்பின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எண்ணிய கே.பி.செல்வாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அது என்ன?
சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிற உத்தரவு நகலைப் பெறவே மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம்.அது இருந்தால்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்பதால் தினந்தோறும் நீதிமன்றம் சென்று முறையிட்டும் அந்த உத்தரவு நகலை மிக தாமதமாகவே பெற முடிந்ததாம்.
அதைப் பெற்று படித்துப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
உத்தரவு நகலை உடனே கொடுக்காமல் இழுத்தடித்தது உத்தரவில் மேல்முறையீட்டுக்குத் தடை ஆகிய அதிர்ச்சிகளை மீறி மீண்டும் சட்டப்போராட்டம் நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் கே.பி.செல்வா.
அந்த மனுவை இன்று விசாரிக்க இருக்கிறார் நீதிபதி ஆ.சுரேஷ்குமார்.
வழக்கே போடமுடியாது என்கிற தடையை உடைத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. விசாரணையில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
– அ.தமிழன்பன்











